விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்த இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார்.
விஜய் டிவி சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பவித்ரா ஜனனி. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து வெளியடுவார்.
சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருப்பதோடு தற்போது வைரலாகி வருகிறது.
0 கருத்துகள்