ஊருல நீ ஒருத்தி தான் கர்ப்பமா இருக்கியா..? - கடுப்பில் வெண்பாவாக மாறிய ஃபரீனா..!


பாரதி கண்ணம்மாவில் வெண்பா ரோலில் நடித்து வரும் ஃபரினா ஆசாத் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கின்றனர். "3 மாதம் இருக்கிறது. குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான்கு வருட கனவு நினைவாகி இருக்கிறது. 
 
என் உடல் அதிசயம் செய்து உள்ளது என கூறி தனது கர்ப்பத்தை அறிவித்தார்.இன்ஸ்டாகிராமில் ஃபரினாவை மிக மோசமாக திட்டி வந்த நெட்டிசன்கள், சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். 
 
அதன் பிறகு ஃபரினா வெளியிட்டு வரும் pregnancy போட்டோஷூட் ஸ்டில்களும் அதிகம் வைரல் ஆகி வருகிறது. அவற்றை பார்த்து அவரை சில ட்ரோல் செய்யவும் செய்கின்றனர். அவர்களுக்கு ஃபரினா பதிலடியும் கொடுத்து வருகிறார். கர்ப்பமாக இருந்தாலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஃபரினா. 
 
 
அதில் அவரது வயிறு பெரிதாக தெரிவதால் வேறு நடிகையை நடிக்க வைக்கும் படி கேட்டாராம் அவர்."என்னை மாத்திடுங்க என நானே போய் கேட்டேன், ஆனால் இயக்குனர் 'நீ ஏன்மா கவலை படுற நான் பார்த்துக்கொள்கிறேன்' என கூறிவிட்டார் என சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்து உள்ளார்.
 
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது முதல்முறையாக கணவருடன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் தனது வயிற்றை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ள ஃபரினா அழகாக இருக்கிறார். 
 
 
இந்த போட்டோஷூட் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார். அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தவாறு வயிறு தெரியும் வகையில் போட்டோ ஷுட் நடத்தினார். 

 
அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபரினா ஷேர் செய்திருந்த நிலையில், இதுவரை 4.95 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில், ஆசாமி ஒருவர் ஊருல நீ ஒருத்தி தான் கர்ப்பமா இருக்கியா..? என்று விளாசல் கமென்ட் ஒன்றை பதிவு செய்து ஃபரீனாவின் எதிர் விளாசலுக்கு ஆளாகியுள்ளார். 
 
 
நான் ஒரு மாடல். என்னுடைய வேலை இது..? நான் ஒல்லியா இருந்தாலும்.. குண்டா இருந்தாலும்.. உடல்நலம் குன்றி இருந்தாலோ..? இல்ல, கர்ப்பமா இருந்தாலோ என்னோட வேலையை நான் செய்வேன். உனக்கு ஏன் சூ** எரியுது.. என்னை மன்னிச்சிடுங்க.. என்று விளாசி தள்ளியுள்ளார் அம்மணி. 
 
இதனை தொடர்ந்து, அந்த ஆசாமி.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்களோட கர்ப்பம்.. உங்களோட போட்டோ சூட்.. உங்களோட விருப்பம்.. நான் என் கமெண்ட்டை டெலிட் பண்ணிட்டேன் என்று ஃபரினாவுக்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.

ஊருல நீ ஒருத்தி தான் கர்ப்பமா இருக்கியா..? - கடுப்பில் வெண்பாவாக மாறிய ஃபரீனா..! ஊருல நீ ஒருத்தி தான் கர்ப்பமா இருக்கியா..? - கடுப்பில் வெண்பாவாக மாறிய ஃபரீனா..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.