பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வருகிறார் ஃபரினா ஆசாத். அந்த சீரியலை பார்ப்பவர்கள் நிச்சயமாக அவரை அதிகம் திட்டி இருப்பார்கள்.
அந்த அளவுக்கு மோசமான கதாப்பாத்திரம் தான் அது. இன்ஸ்டாகிராமில் ஃபரினாவை மிக மோசமாக திட்டி வந்த நெட்டிசன்கள், சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
அதன் பிறகு ஃபரினா வெளியிட்டு வரும் கர்ப்பகால போட்டோஷூட் ஸ்டில்களும் அதிகம் வைரல் ஆகி வருகிறது. அவற்றை பார்த்து அவரை சில ட்ரோல் செய்யவும் செய்கின்றனர்.
அவர்களுக்கு ஃபரினா பதிலடியும் கொடுத்து வருகிறார். கர்ப்பமாக இருந்தாலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஃபரினா.
அதில் அவரது வயிறு பெரிதாக தெரிவதால் வேறு நடிகையை நடிக்க வைக்கும் படி கேட்டாராம் அவர். "என்னை மாத்திடுங்க என நானே போய் கேட்டேன், ஆனால் இயக்குனர் 'நீ ஏன்மா கவலை படுற நான் பார்த்துக்கொள்கிறேன்' என கூறிவிட்டார் என சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சக நடிகை ரேமா அசோக்குடன் கவர்ச்சி உடையில் மொட்டை மாடியில் நின்று நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த ட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு.. இந்த ஆட்டம் தேவையா.. என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.