தமிழுக்கு வரும் இளம் நடிகை பிரக்யா..!


தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 
 
நான் வட இந்தியப் பெண். ஜம்முதான் எனக்கு சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. இன்னும் பெயர் வைக்கவில்லை. 99 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. 
 
நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம். பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன். 
 
இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. 
 
அடுத்தடுத்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் அதுபற்றிய அறிவிப்பு இருக்கும்’’ என்கிறார் பிரக்யா நாக்ரா

தமிழுக்கு வரும் இளம் நடிகை பிரக்யா..! தமிழுக்கு வரும் இளம் நடிகை பிரக்யா..! Reviewed by Tamizhakam on September 09, 2021 Rating: 5
Powered by Blogger.