வடிவேலு-வுக்கு டிமிக்கி கொடுத்த சதீஷ் படக்குழு..! - கோபத்தில் வடிவேலு ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு நாய் சேகர் என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது. இதனிடையே, சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிடுகிறார்கள். 
 
அப்போது படத்தின் பெயர் யாருக்கு என்பது தெரிந்துவிடும். நாய் சேகர் என்பது சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி கதாநாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர். அந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையும், அந்தக் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்த ஒன்று. 
 
அந்தப் பெயர் வடிவேலு நடிக்கும் படத்திற்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அந்தப் பெயரையும், கதாபாத்திரத்தையும் சுராஜ், வடிவேலு ஆகியோர் இணைந்து தான் உருவாக்கியிருப்பார்கள். 
 
அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்துவதற்குத்தான் நியாயமான உரிமை உள்ளதென்றும் திரையுலகில் தெரிவிக்கிறார்கள். வடிவேலுவின் பல நகைச்சுவை வசனங்கள் பாடல்களிலும், படங்களிலும் பல்வேறு விதங்களில் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நியாயமாக அவரிடம் அதற்கு அனுமதி பெற்றுத்தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும். சதீஷ் படக்குழுவினர் என்ன செய்யப்போகிறார்கள் என்ற காத்திருப்பு நிலவியது.
 

இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்றும் எண்ணமில்லை என்று "நாய் சேகர்" தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் படக்குழு. கடைசியில வடிவேலுவுக்கு டிமிக்கி குடுத்துடாங்களே.. என கடும் கோபத்தில் உள்ளனர் வடிவேலு ரசிகர்கள்.

வடிவேலு-வுக்கு டிமிக்கி கொடுத்த சதீஷ் படக்குழு..! - கோபத்தில் வடிவேலு ரசிகர்கள்..! வடிவேலு-வுக்கு டிமிக்கி கொடுத்த சதீஷ் படக்குழு..! - கோபத்தில் வடிவேலு ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.