இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாது..? - மீரா வாசுதேவன் வேதனை..!


தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். எந்த படமும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுக்கவில்லை. 
 
20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள இவர் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார். 
 
இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன், விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு மலையாள நடிகர் ஜான் கொக்கன் (சார்பட்டா பரம்பரை வேம்புலி ) என்பவரை திருமணம் செய்துகொண்டார். 
 
ஆனால், 2016-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்த இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கு தன்மத்ரா படம் ஒரு நல்ல படியாக ஓடியது. 
 
இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். 
 
மேனஜர் என்னை அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பயன்படுத்தி கொண்டார். எனக்கு வந்த பல நல்ல பட வாய்புகளை என்னிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டார். எனக்கு மொழி பிரச்சனை இருந்த காரணத்தினால் தான் மேனஜர் கூறியதை எல்லாம் கேட்டேன். 
 
அந்த மானேஜர், எனக்கு வந்த பல வாய்ப்புகளை தடுத்தார். அந்த வாய்ப்புகளை தனக்கு வேண்டிய மற்ற நடிகைகளுக்கு கொடுத்தார். அப்போது நான் மும்பையில் இருந்ததால் இந்த விஷயங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்