தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் 1990ஆம் ஆண்டு அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மௌனம் பேசியதே, கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மீண்டும் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 90 காலத்தில் இருந்தது போலவே இப்பவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின் த்ரிஷா.
த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் ‘சாமி. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா.
அதற்கு பின் அலை, எனக்கு 20 உனக்கு 18, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார். த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கில்லி.
கிட்டத்தட்ட 20 வருடங்களான த்ரிஷா திரையில் ஜொலித்து வருகிறார். இந்நிலையில், ஆயுத எழுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து.
என்னுடைய முதல் பீச் ரொமான்ஸ் இது. மணிரத்தினம் போன்ற லெஜண்ட் இயக்கத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்