லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், நயன்தாரா இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக ஒரு தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின், நயன்தாரா திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் நயன்தாரா வரும் டிசம்பர் மாதத்திலோ, அல்லது 2022 ஆம் ஆண்டில் தொடக்கத்திலோ திருமண வாழ்க்கையில் இணைவார் என கூறப்படுகிறது.
தற்போது இவர் இயக்குனர் அட்லீயின் பான் இந்தியா படமாக உருவாகி வரும், படத்தில் படப்பிடிப்பிற்காக பூனேவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திவிட்டு, மற்ற வேலைகளை முன்னெடுக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.