முதன் முறையாக நீச்சல் உடையில் கயல் ஆனந்தி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாயகிகள், குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தாலும் பின் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில், நடிகை கயல் ஆனந்தி, கவர்ச்சி இல்லாதா கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவை அணிந்து சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், சினிமா உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டார் அம்மணி. சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் திருமணம் என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். 
 
அவர் கூறியதாவது, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.
 
 
பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். 
 
அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார் அம்மணி. சமீபத்தில், வெளியான தெலுங்கு படத்தின் ட்ரெய்லரில் படு சூடான காட்சிகளில் நடித்திருந்தார் அம்மணி. 
 
 
என்னுடைய உடல் வாகிற்கு கவர்ச்சி உடைகள் செட் ஆகாது என்று கூறி வந்த அம்மணி தற்போது நீச்சல் உடையில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியாகும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள கிரைம், த்ரில்லர் வெப் சீரிஸ் ஒன்றில் தான் பிகினி உடையில் நடிக்கவுள்ளாராம். 


இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள். கவர்ச்சி நோ சொன்ன கயல் ஆனந்தி, இப்போது பிகினி உடையில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே என்று வாயடைத்து போய் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--