"ரெட் ஹாட்.. செர்ரி பழம் மாதிரி.. மொலுமொலுன்னு இருக்கீங்க.." - புன்னகையரசி சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார். இருப்பினும் இடையிடையே ஓரிரு படங்களில் தலைக்காட்டினார். 
 
இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து, மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார். 
 
அதற்கு கேப்ஷனாக "உங்களால் எல்லா நேரத்திலும் எல்லா பேருக்கும் நல்லவராக இருக்க முடியாது. ஆனால், எப்போதும் சிலருக்கு சிறந்தவராக இருக்க முடியும்" என பதிவிட்டுள்ளார். சினேகாவின் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
இதனை பார்த்த ரசிகர்கள், "ரெட் ஹாட்.. செர்ரி பழம் மாதிரி.. மொலுமொலுன்னு இருக்கீங்க.." என்று வர்ணித்துவருகிறார்கள்.
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இருந்தவர் சினேகா என்பதும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
நடிகை சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
நடிகை சினேகா கடந்த 2000ம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 


குறிப்பாக அவர் நடித்த ஆட்டோகிராப், ஆனந்தம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை சினேகாவுக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

"ரெட் ஹாட்.. செர்ரி பழம் மாதிரி.. மொலுமொலுன்னு இருக்கீங்க.." - புன்னகையரசி சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! "ரெட் ஹாட்.. செர்ரி பழம் மாதிரி.. மொலுமொலுன்னு இருக்கீங்க.." - புன்னகையரசி சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.