ட்ரான்ஸ் மாடலும், நடிகையுமான நமீதா, பிக்பாஸ் ஐந்தாம் சீசனில் கலந்துக் கொண்டிருக்கும் ஒரு திருநங்கை போட்டியாளர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை போன்ற திருநங்கைகளை இயல்பாக யாரும் பார்ப்பதில்லை.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னுடைய சமூகத்தினர் குறித்து எடுத்துரைப்பதற்காகவும் தான் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, போட்டியாளர்கள், தங்கள் வாழ்க்கையின் சம்பவங்களைப் பற்றி பேசும் டாஸ்கும் உண்டு.
நேற்று அந்த டாஸ்கில் பேசிய போது நமீதா கதறியழுதார். அதைப் பார்த்த மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி உட்பட பலரும் நமீதா அழுதபடியே தனது கதையை சொல்லிக் கொண்டிருந்தபோது வந்து ஆசுவாசப்படுத்தி விட்டுச் சென்றார்கள்.
யாருக்காவது ஏதேனும் குறை இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை சொல்லி வளர்த்த தனது அம்மாவால், தனது பாலின மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுதான் மிகப்பெரிய சோகம் என்று நமீதா சொன்னார்.
மேலும், இவர் சொன்ன சம்பவங்களை வைத்து ஒரு படமே எடுக்கலாம் போல என்ற ரேஞ்சுக்கு சுமார் அரை மணி நேரம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுக்கி கொண்டே சென்றார். அதில், மிகவும் கொடூரமான ஒன்று தான் அவரது மார்பகத்தை உறிஞ்சி எடுத்தது.
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை எடுக்கவும், உடல் எடை குறைக்கவும் கொழுப்பை உறிஞ்சுதல் அதாவது லிப்போ சக்சன் என்ற மருத்துவ முறை பயன் படுத்தப்பட்டு வருகின்றது. நமீதா மாரிமுத்து 11-ம் வகுப்பு படிக்கும் போது பெண்கள் போல இவருக்கு மார்பகங்கள் வளர்ந்து விட்டதாம்.
இதனால் அவரது வகுப்பில் இருந்த நண்பர்கள், சக மாணவர்கள் மூலம் பலமுறை சீண்டலுக்கு உள்ளானாராம். இதனை தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஒன்றில் லிப்போ சக்சன் என்ற முறையை பயன்படுத்தி மார்பகத்தில் இருந்த கொழுப்பை உறிஞ்சி எடுத்து விட்டார்களாம்.
அதன் பிறகு, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திருநங்கையாகவே வாழ தொடங்கிய பின் செயற்கையாக உட்புகுத்துதல் எனப்படும் ஆர்ட்டி பீசியல் இன்செமிநேஷன் என்ற முறையை பயன்படுத்தி மார்பகங்களை செயற்கையாக வைத்துக்கொண்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார் நமீதா.
இது சக போட்டியாளர்கள், உட்பட இந்த நிகழ்ச்சியை பார்த்த பலரது மனதையும் கரைத்தது.
Tags
Namitha Marimuthu