ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் சாய் தன்ஷிகா, தற்போது கடற்கரையை சூடேற்றும் அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்த சுண்டி இழுத்து வருகின்றது.
பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.
சிலம்பம் சுற்றுவதில் வல்லவர். திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பை பெற்று வரும் நிலையில், தற்போது சாய் தன்ஷிகாவும் செம்ம ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
கடற்கரையை சூடேற்றுவது போல் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளதே தவிர முகம் சுழுக்கும் அளவுக்கு இல்லை.
சூரிய வெளிச்சத்தில் முடிகளை பறக்க விட்டு... படு ஜோராக போஸ் கொடுக்கும் சாய் தன்ஷிகா தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 5 படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில், அடுத்த அடுத்த பட வாய்ப்புகளுக்கு வலை வீசுவது போல் இவரது ஹாட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
கால்களை நனைக்கும் கடல் நுரையோடு படு ஜோராக போஸ் கொடுக்கும் சாய் தன்ஷிகா சாய் தன்ஷிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Tags
Dhanshika