உடல் எடை கூடி... ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய.. நடிகை மேக்னா ராஜ்..! - ரசிகர்கள் ஷாக்..!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் சீரியலில் மூலம் அறிமுகமானவர் ஜெரி. இவர் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் சொல்ல வந்தேன். இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ். 
 
அதனை தொடர்ந்து கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்ற ‘நந்தா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். 
 
 
கன்னட திரைத்துறையின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் அவரின் சகோதரர் துருவா சர்ஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிருவின் மரணம் கன்னட திரைத்துறையை கடந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டுதான் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார்.மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். 
 
 
மேக்னா ராஜ் தமிழிலும் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அவர்களின் திருமணம் முதலில் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடந்து முடிந்தது. பொருத்தமான ஜோடியாக வலம் வந்தனர் இருவரும். சிரு இறக்கும் போது மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். 


தற்போது, கணவர் மறைந்த துக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்த பின்பு உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.