சீரியல் குடும்ப குத்துவிளக்காக வரும் அர்ச்சனா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. 
 
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா நடித்து இருந்தனர்.
 
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. சென்னையை சேர்ந்தவர். இவரது அப்பா கல்லூரி பேராசியரியர். இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சிறு வயதிலிருந்தே ஆன்கராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். 
 
கல்லூரி படிக்கும்போது டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்ற ஆப்களில் வீடியோக்களை அப்லோடு செய்து பிரபலமானவர்.காதல் பாடல்களை, ரொமாண்டிக் எக்ஸ்பிரஷன்களோடு டிக் டாக்கில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 
 
 
இதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டார். இதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அர்ச்சனா காலெஜ் இறுதி ஆண்டு படித்து வந்தார். 
 
 
பிறகு சேனலில் ஒரு வருடம் வேலை செய்து வந்தார். அப்போதுதான் இன்ஸ்டாகிராமில் அர்ச்சானாவின் புகைப்படத்தை பார்த்து விஜய் டிவியின் ராஜாராணி2 ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அதில் செலக்ட் ஆனவர் சீரியலின் வில்லியாக நடித்து வருகிறார். 

 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை அப்லோடியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியல் குடும்ப குத்து விளக்காக வரும் அர்ச்சனாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--