தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான்.
இந்த படத்தின் மூலம்தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர். இந்த படங்களை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெற்றியை சுவைத்தார்.
ஆனால் தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைந்து ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் கயல் ஆனந்தி இளம் நடிகருடன் மிகவும் நெருக்கமாக காட்சியில் நடித்து உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கயல் ஆனந்தி இப்படி கவர்ச்சியாக நடித்து இருக்கிறது என வாயடைத்துப் போய் உள்ளனர்.
இந்த காட்சி குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Tags
Kayal Aanandhi