VIRAL : பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதன் முறையாக நமீதா வெளியிட்ட வீடியோ..!


தமிழகம் மட்டுமல்ல, உலக தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர் நமீதா மாரிமுத்து. 
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், கடந்த நான்கு சீசன்களில் இல்லாத பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்துள்ளனர். அதில் முக்கிய மாற்றமாக இம்முறை யாரும் எதிர்பாராத வண்ணமாக நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகினார். 
 
இதன் மூலம் தமிழ் பிக்பாஸ் சீசனில் முதன்முதலில் பங்கேற்றுள்ள திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை இவருக்கு கிடைத்துள்ளது. சரி இவர் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க... சென்னையை சேர்ந்தவர், மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நமீதா. 
 
2014ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகும் அவரது வெற்றிநடை நிற்கவில்லை. 2015ம் ஆண்டின் மிஸ் கூவாகம், 2018ம் ஆண்டில் மிஸ் இந்தியா என ஒரு கலக்கு கலக்கினார். 
 
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த காரணமும் சொல்லாமல் திடீரென வெளியேறினார். என்ன காரணம்.. எதனால் வெளியேற்றப்பட்டார்.. என்ற எந்த காரணமும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
 


நிலைமை இப்படி இருக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து மகிழ்ந்த ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post