சாய் பல்லவியா இது...? - இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை சாய் பல்லவி சிம்பிள் காட்டன் சேலையில், முகம் சிவந்த புன்னகையோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". 
 
இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 
 
 
ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார். 
 
தமிழில் சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார். 
 
 
கண்டமேனிக்கு தன்னை தேடி வரும், அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னைக்கு எப்படி பட்ட கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும், என்பதை தேர்வு செய்து நடித்து அசத்தி வருவது தான் சாய் பல்லவியின் பலம் என்று கூறலாம். 


 
மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான், திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ். 
 
சினிமா தவிர வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸில் சாய்பலோலவியா இது..? என்று கேட்கும் அளவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளாராம் அம்மணி.
சாய் பல்லவியா இது...? - இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! சாய் பல்லவியா இது...? - இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 23, 2021 Rating: 5
Powered by Blogger.