கையில் "ஆணுறை" பாக்கெட்டை பிடித்தபடி.. போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங்..! - கிளம்பிய பரபரப்பு..!

 
'இன்று நேற்று நாளை' பட இயக்குநரின் 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ்காக காத்திருக்கிறார் ரகுல் ப்ரித் சிங். சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்துள்ள இந்தப்படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 
 
இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Chhatriwali என பெயரிடப்பட்டுள்ள. இந்த படத்தில் ரகுல் பிரித் சிங் காண்டம் டெஸ்டர் ஆக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலை இல்லாத பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்த பணியை அவர் எப்படி சவாலுடன் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் முழுக்க முழுக்க காமெடி கலந்து, எந்த வித ஆபாசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரகுல் பிரித் சிங் தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப்படம் ரகுல் பிரீத் சிங்கிற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத்தரும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், கையில் பெரிய காண்டம் பாக்கெட்டுடன் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங். இதனை தொடர்ந்து படத்தின்மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.