‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக நடிப்பை வெளிப்படுத்தினார்.
மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.
எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.
16 வயதிலேயே சோசியல் மீடியாவின் குட்டி இளவரசியாக மாறிவிட்ட அனிகா சுரேந்திரன். தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.
ஆரம்பத்தில் அழகு பாப்பாவாக அடக்க ஒடுக்கமான போஸ்களை கொடுத்து வந்த அனிகா. தற்போது தனது வயதுக்கு மீறிய கிளாமர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்துவது ரசிகர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
Tags
Anikha