தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சொந்த மாநிலமான ஆந்திராவில் அரசியலில் குதித்தார். ஆந்திர மக்கள் இவர்மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பால் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினிமாவை போல அரசியலிலும் பலமிக்க தலைவராக வலம் வருகிறார்.தற்போது தனது தொகுதி மக்களோடு இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இது மட்டுமில்லாமல், மக்கள் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய இடுப்பு தெரிய இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல, இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Tags
Actress Roja