சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலுக்கு சீரியல் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் பெயர் ஸ்வேதா ஹெல்கே.சீரியலின் முக்கிய கதாபாத்திரமான சின்னராசுவின் தங்கையான ‘துளசி’ கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார்.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சீரிய நடிகை ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார்.கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்துள்ளார்.
ஏஎம்சி இன்ஜினியரிங் கல்லூரியில் ECE படித்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அப்போது தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் கலர்ஸ் கனடா சேனல் தொடரில் நடித்தார்.
சீரியலில் துளசி கேரக்டருக்கு நேர்மாறனவர் ஸ்வேதா. எப்பொழுதும் நண்பர்களுடன் அவுட்டிங் போவது ரொம்ப பிடித்தமான விஷயமாம். நடிப்பை தாண்டி ஸ்வேதா ஒரு டானஸரும் கூட. பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் Event Organizer ஆகவும் சிறுது காலம் இருந்துள்ளார். அதன்பிறகு நடிப்பில் பிசியானதால் அதை தொடர முடியவில்லை. இந்நிலையில், பேண்ட், புடவை என வித்தியாசமான காம்பினேஷனில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி காம்பினேஷன் இது..? என்று கலாய்த்து வருகின்றனர்.
0 கருத்துகள்