2025 – ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ?

1998 – ல் தொடங்கின கோட்டேக் (Kodak Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோடு சக்கை போடு போட்டது…!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை…! வெள்ளை தாளில் அச்சு எடுத்து தான் புகைப்படம் பார்க்க முடியும் என்பது இவ்வளவு சீக்கிரம் வழக்கழிந்து போகும் என  அவர்கள் நினைக்கவே இல்லை.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்தில் நடக்கும்!.*

தெருவுக்கு தெரு முளைத்த PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்போது எங்கே போனது??*

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போது LED பல்பு தான்.

---- Advertisement ----

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் எனில்  சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் கூட வைத்து கொள்ளாமல், ‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்தி வருகிறது…கமிஷனோட…! இல்லீங்களா..?

Uber என்பது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமாக  வைத்துக்கொள்ளாமல், இன்று  உலகிலேயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியாக கொடி கட்டி பறக்ககிறது…!

இந்த மாதிரி மென்பொருள் கருவி எல்லாம் எப்படி நன்றாக போயிக்கொண்டு  இருக்கிற  தொழில்களை பாதிக்கும் ?*

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை கூறலாம். உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருகிறது…என்ன பண்ணுவது என தெரியவில்லை…! என்ன செய்வீர்கள்? ஒரு நல்ல வக்கீலை பார்த்து..யோசனை கேட்பீர்கள்…! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவர் அவருடைய கட்டணத்தை வாங்குவாரா..! இல்லையா…!

இப்போது, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசாக செய்து கொடுத்தால் ? உங்களுடைய சிக்கல் என்ன என்று சின்னதாக சில வரிகள் தட்டச்சு பண்ணிய  உடனே,  பிரிவுகள் பற்றிய சரியான விவரங்களை நிகழ் தகவுகளை அந்த கம்ப்யூட்டர் கொடுத்தால்  நாட்டில் பெரும்பாலான வக்கீல்கள் தலையில் துண்டை போட்டுக்கிட்டு தான் போகணும்…! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் மிகத் தெளிவாக சொல்லும்.*

IBM Watson, இப்போது அமெரிக்காவில் அதைத்தான் செய்கிறார்கள்.  ஒரு வக்கீலாக அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும் என்றால், இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடிகளில் சொல்லும்…!

எனவே, அமெரிக்க பார் கவுன்சிலின் கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துக்குள் அமெரிக்காவில் 90% வக்கீல்கள் காணாமல் போய்வீடுவார்கள்.

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம் தான் இனி செய்யும்!,

டாக்டர்களின் வேலையை அடா செயலி பண்ணும்,  

ப்ரோக்கர்கள் வேலையை மேஜிக் பிரிக்ஸ், குயிக்கர், 99எக்கர் போன்ற, இணையதளங்கள் கவனித்துக்கொள்ளும்,

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம்  மேற்கொள்ளும்!

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் வணிக வளாகம் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்போது இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS செயலி மூலம் எடுத்து கொள்ளலாம்.

 

80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆட்கள் தேவை இல்லை.கம்ப்யூட்டரே பார்த்துக்கொள்ளும்.  பொருள் நிபுணர் (‘Subject Matter Experts’) என சொல்லப்படும் விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்…!

---- Advertisement ----