டபுள் தமாக்கா... குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சினேகன் - கன்னிகா வெளியிட்ட வீடியோ!

சினேகன்: 

திரைப்பட பாடல் ஆசிரியரான சினேகன் தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு சூப்பர் ஹிட் அடித்த பல பாடல்களை பாடி இருக்கிறார். இந்த பாடல்களை எல்லாம் இவர்தான் பாடினாரா? என யூகிக்கும் அளவுக்கு பல வெற்றி திரைப்படங்களுக்கு பாடல் பாடி பிரபலமான பாடலாசிரியராக இருந்து வந்தார் .

ஆனால் இவர் பிரபலமானது என்னவோ விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான்.அப்போதுதான் சினேகன் யார் என்பதே பலருக்கும் தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் அடையாளத்தையும் பெயரும் புகழும் தேடிக்கொடுத்தது. 

திரைப்படங்கள்: 

சினேகனின் நடவடிக்கைகள் அதில் மக்களுக்கு வெகுவாக பிடித்திருந்தது. 1997 ஆம் ஆண்டில் புத்தம் புது பூவே திரைப்படத்திற்காக பாடல் எழுதியிருந்தார். 

அதை அடுத்து பாண்டவர் பூமி திரைப்படத்தில் ஹிட் பாடல்களை எழுதி இன்றுவரை ரசிகர்களின் ரசனைக்கு உள்ளான பாடல் ஆசிரியராக இருந்து வருகிறார்.

யார் இது தவிர சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில்,பகவதி, சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், பேரழகன் , ஆட்டோகிராப், மன்மதன், ராம், குண்டக்க மண்டக்க,ஏகன், படிக்காதவன் , முத்திரை, ஆடுகளம், மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல்களை எழுதி வருகிறார். 

இதனிடையே இவர் பிரபல தமிழ் சினிமா நடிகையான கன்னிகா என்பவரை பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்திருந்தார்.ஆனால் இந்த காதலை அவர் வெளியில் சொல்லவே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக இருந்தபோது தன்னுடைய காதலி யார் என்பதை எந்த ஒரு இடத்திலும் அவர் மூச்சே விட்டு இருக்க மாட்டார். 

இரட்டை குழந்தைகள்:

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய நிச்சயம் செய்து கொண்டு அனைவருக்கும் இவர்தான் தன் வருங்கால மனைவி எனக்கூறி அதிர வைத்தார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக சமூக வலைத்தளங்களில் அப்போது வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் கன்னிகா. இப்படியான நேரத்தில் தற்போது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர்கள் இருவரும் வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சினேகன் 

"இறைவா நீ ஆணையிடு

தாயே எந்தன்

மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..

மகளே எந்தன் தாயாகவும் ...

இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...

இதயமும்,மனமும்

மகிழ்ச்சியில் நெகிழ்ந்து

நிரம்பி வழிகிறது ...

உங்களின் தூய அன்பினால்

எங்கள் வாரிசுகளை

வாழ்த்துங்கள்.

என்றும் அன்புடன்

சினேகன்

கன்னிகா சினேகன் .




என தாயே எந்தன் மகளாய் மாறப் பாடலின் வரிகளுடன் இதயம் கலந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இதோ இந்த வீடியோ:

https://www.instagram.com/reel/DFc-2lISONP/?utm_source=ig_web_copy_link