சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ரச்சிதா மகாலட்சுமி.
ஒரே ஒரு பாடலின் மூலம் உலகப் புகழ் பெற்ற இவர், ஃபயர் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக பல எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும், சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் வாவ் தமிழகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது உணவு, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
ரச்சிதா நடிகையாக இருப்பதால் தனது உடல் மற்றும் கூந்தலில் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்காக அவர் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கிறார். காலையில் எழுந்தவுடன் அம்மா வீட்டில் தயாரித்த சத்துமாவு கஞ்சி குடிக்கிறார். 11 மணிக்கு ஒரு இளநீர் குடிக்கிறார்.
தினமும் இதை அவர் கண்டிப்பாக குடிப்பாராம். மதியம் 1 மணியளவில் காய்கறிகள், கீரை, கூட்டு, பொரியல் மற்றும் தயிர் போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்.
மாலை 4 மணியளவில் வெஜிடபிள் அல்லது பழ சாலட் சாப்பிடுகிறார். இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்கிறார். அதற்குப் பிறகு வேறு எதுவும் சாப்பிடமாட்டார்.
அசைவ உணவு அவருக்கு அவ்வளவாக பிடிக்காது. எப்போதாவது கொஞ்சம் சிக்கன் சாப்பிடுவார். பிரியாணி பிடிக்கும், ஆனால் அதைவிட இனிப்புகள் தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ரச்சிதாவின் முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன. பல முயற்சிகள் செய்தும் அவை போகவில்லை. அப்போது ஒரு மருத்துவர் உணவு முறையையும், தூங்கும் நேரத்தையும் மாற்றச் சொன்னார்.
அதன்படி தனது உணவு முறையை மாற்றிய பிறகு, சில மாதங்களிலேயே முகத்தில் இருந்த பருக்கள் குறைந்துவிட்டன. இந்த முறையை ஆண்கள், பெண்கள் என பாலின வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று ரச்சிதா கூறுகிறார்.
கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, நெல்லிக்காய் போன்றவற்றை தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு தேய்த்து குளிப்பார். இதுதான் தனது கூந்தல் பராமரிப்பு முறை என்று ரச்சிதா கூறுகிறார்.
ரச்சிதா தனது அழகின் ரகசியத்தையும், ரசிகர்களுக்கு சில டிப்ஸ்களையும் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
0 கருத்துகள்