மூக்குத்தி அம்மன் 2 பூஜை சர்ச்சை: மீனாவை அவமதித்த நயன்தாரா? பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்!
நடிகை நயன்தாரா எப்போதுமே தனது ஸ்டைலான நடிப்பாலும், தனித்துவமான ஆளுமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் சில சர்ச்சைகளில் சிக்கி வருவது வருத்தமளிக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற "மூக்குத்தி அம்மன் 2" பட பூஜையில், குஷ்பு, மீனா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நயன்தாரா, நடிகை மீனாவை அவமதிக்கும் விதமாக முகத்தைக் கூட கொடுத்து பேசவில்லை என்று இணையத்தில் செய்திகள் பரவின.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், நயன்தாரா குறித்து சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விண்ணுலக தேவதையா நயன்தாரா? திண்டுக்கல் வெங்கடேஷ் சாடல்:
நயன்தாரா ஒரு பேட்டியில் "சந்திரமுகி" படத்தில் நடிக்கும்போது ரஜினி மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்று தனக்குத் தெரியாது என்று கூறியதை வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"அன்னைக்கு பிடிச்சது நயன்தாராவுக்கு சனி. அன்றிலிருந்து நயன்தாராவின் அழிவு காலம் ஆரம்பமாகி, கடந்த ஓராண்டாகவே அவர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சந்திரமுகி படத்தில் மட்டும் அன்று நயன்தாராவை நடிப்பதற்கு ரஜினி அனுமதிக்கவில்லை என்றால், இன்று நயன்தாரா யார் என்று பலருக்கு தெரிந்திருக்காது.
அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றவர் தான் நயன்தாரா. ஆனால், நயன்தாரா, எனக்கு ரஜினி யார் என்று தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதே, மம்முட்டி, மோகன்லால், ஷாருக்கானை தெரியாது என்று சொல்லி இருப்பாரா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அண்ணாத்த" படத்திலும் தொடர்ந்த டார்ச்சர்:
நயன்தாராவின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக வெங்கடேஷ் குற்றம் சாட்டியுள்ளார். "அண்ணாத்த" படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதே திரைப்படத்தில் ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பூ, மீனா இருவரும் நடித்திருந்தார்கள். கதைப்படி அந்த படத்தில் இருவரும் ஒன்றாக படம் முழுக்க பயணிக்கும் வகையில் தான் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நயன்தாராவோ, இவர்களின் கதாபாத்திரம் எதற்கு என்று இயக்குனரை டார்ச்சர் செய்து, கடைசியில் அவர் கதையை அப்படியே மாற்றி, முதல் பாதியில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மீனா, குஷ்பூவை நடிக்க வைத்தார். இதை குஷ்பூ கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்" என்று வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
"லேடி சூப்பர் ஸ்டார்" பட்டமும் சர்ச்சையும்:
அதுமட்டுமல்லாமல், "அண்ணாத்த" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என டைட்டில் வரும்போது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என டைட்டிலை போடும்படி நயன்தாரா டார்ச்சர் செய்ததாகவும் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் போட வேண்டும் என இயக்குனரிடம் வாக்குவாதம் செய்ய, இயக்குனர் தயாரிப்பாளரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் காதுக்கு சென்றபோது, "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்" என்று பெருந்தன்மையாக சொல்லி இருக்கிறார்.
இப்படி மற்றவர்களை டார்ச்சர் செய்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா, அந்த பட்டத்தில் தனக்கு விருப்பமே இல்லை என்றும், போட வேண்டாம் என்று சொன்னாலும் பலர் போட்டுவிடுகிறார்கள் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டதை வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இப்படி மாற்றி மாற்றி பேசுவதையே நயன்தாரா வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவர் உண்மையில் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே தெரியாமல், கடந்த ஒரு வருடமாகவே ஒருவிதமான குழப்பத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் நயன்தாராவின் மார்க்கெட் சரிந்தது தான்" என்று அவர் கூறியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் நடந்த அவலம்:
இதே வேலையை தான் நயன்தாரா "மூக்குத்தி அம்மன் 2" பட பூஜையிலும் செய்திருப்பதாக வெங்கடேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த திரைப்படத்தில் மீனாவும் ரெஜினாவும் நடிக்கிறார்கள்.
மீனா ஏற்கனவே பல சாமி திரைப்படங்களில் நடித்திருப்பதால் அவரும் இந்த திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். பட பூஜையில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா தனியாக கெரவன் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
ஆனால், பட பூஜையில் தனக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும் என நினைத்து இருந்த நிலையில், தனக்கு மட்டும் தான் முன்னுரிமை, முதல் மரியாதை செய்வார்கள் என்று நயன்தாரா எண்ணிய நிலையில் அங்கு மீனா, குஷ்பூ, ரெஜினா என எல்லா நடிகைகளுக்கும் பொன்னாடை போர்த்தியது நயன்தாராவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. நயன்தாரா மேடையில் இருந்த போது ரெஜினா தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார்.
இதனால் மேலும் கடுப்பான நயன்தாரா கெரவனுக்கு வந்து ரெஜினாவுக்கு போன் போட்டு, "என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை போட்டோ எடுத்தாய்?" என மிரட்டி இருக்கிறார். இதனால் ரெஜினா அழாத குறையாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இப்படி இந்த பட பூஜையில் ஒருவரையும் விடாது அனைவரையும் இன்சல்ட் செய்திருக்கிறார் நயன்தாரா. இதனால், இயக்குனர் சுந்தர் சிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு ஓரமாக சென்று நின்று விட்டார் என்று வெங்கடேஷ் அந்த பேட்டியில் விவரித்துள்ளார்.
தலைக்கனம் அதிகமானதால் வீழ்ச்சி நிச்சயம்:
நயன்தாராவை எந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ, தற்போது அவரை பலரும் திட்டி வருகின்றனர். நயன்தாராவுக்கு தலைக்கனம் அதிகமாகிவிட்டது என்றும், இதனால் இனிமேல் அவருக்கு வீழ்ச்சி தானே தவிர வளர்ச்சி இல்லை என்றும் வெங்கடேஷ் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
"தயாரிப்பாளராக இருந்தாலும், சக நடிகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும் யாராக இருந்தாலும், அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதே மனபாவத்துடன் நயன்தாரா சென்று கொண்டு இருந்தால், அவருடைய வீழ்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது.
இதை தயவு செய்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அவரிடம் எடுத்துக் கூற வேண்டும்" என்று பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.மூக்குத்தி அம்மன் 2 பூஜை சர்ச்சை: மீனாவை அவமதித்த நயன்தாரா? பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்கள்!
நடிகை நயன்தாரா எப்போதுமே தனது ஸ்டைலான நடிப்பாலும், தனித்துவமான ஆளுமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் சில சர்ச்சைகளில் சிக்கி வருவது வருத்தமளிக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற "மூக்குத்தி அம்மன் 2" பட பூஜையில், குஷ்பு, மீனா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நயன்தாரா, நடிகை மீனாவை அவமதிக்கும் விதமாக முகத்தைக் கூட கொடுத்து பேசவில்லை என்று இணையத்தில் செய்திகள் பரவின.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், நயன்தாரா குறித்து சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்