தென்னிந்திய திரையுலகின் ஜாம்பவான்களான ஜெமினி கணேசன் மற்றும் புஷ்பவல்லி ஆகியோரின் மகளான ரேகா, 90களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
நான்கு வயதில் நடிக்கத் தொடங்கிய இவர், வெகு விரைவிலேயே ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார்.
தனது திரையுலக பயணத்தில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்த ரேகாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரேகா தனது இளம் வயதில், அதாவது 15 வயதாக இருந்தபோது, 'தோ ஷிகாரி' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த திரைப்படத்தில் பிரபல பெங்காலி நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜி கதாநாயகனாக நடித்தார்.
படப்பிடிப்பின்போது, யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக்கும்போது, கதாநாயகனான பிஸ்வஜித் சட்டர்ஜி, ரேகாவிற்கு தெரியாமலேயே அவரை கட்டாயமாக முத்தமிட்டார்.
இந்த சம்பவம் இயக்குனர் அல்லது வேறு யாருக்கும் தெரியாமல் திடீரென நடந்தது. ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் நடிகை ரேகாவின் உதட்டை உறிஞ்சியுள்ளார் நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜி. முத்தக் காட்சியை பார்த்து ஜொள்ளு விட்டு அங்கிருந்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
இதனை பார்த்த நடிகை ரேகா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் யாசர் உஸ்மான் எழுதிய "ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி" என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேகாவின் ஆரம்ப கால வாழ்க்கையில் அவர் சந்தித்த கசப்பான அனுபவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அன்று சிறுமியாக இருந்த ரேகாவை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. திரையுலகில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வருந்தத்தக்கது.