மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் லாஸ் உங்களுக்குத்தான்.. சீரியல் நடிகையின் தாறு மாறு கிளாமர் போட்டோஸ்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ரோஜா" சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த இந்த தொடரில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா நல்காரி, மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கினார். விளம்பர படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு, தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தலைகாட்டினார். 

ஆனால், சன் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "ரோஜா" சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சிபு சூர்யன், நியாஷ் கான் ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பாகி 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 

திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்காமல் இருந்த பிரியங்கா, தனது கணவருடன் மலேசியாவில் ஹோட்டல் பிசினஸ் ஒன்றை தொடங்கினார். உணவகத்தில் பில் போடும் வேலையை செய்து வருவது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த தொழில் நல்ல லாபம் தருவதாக கூறியிருந்தார். 

பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பான "நள தமயந்தி" என்ற தொடரின் மூலம் மீண்டும் தமிழ் சின்னத்திரைக்கு வந்தார். அந்த சீரியலும் ஒரு கட்டத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது "ரோஜா 2" சீரியலில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் பிரியங்கா தற்போது வித்தியாசமான முயற்சியாக அனிமேஷன் திரைப்படமான "மோனா 2" படத்தில் வரும் கதாபாத்திரம் போல போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், கமெண்ட் பாக்ஸில் பிரியங்காவின் அழகை வர்ணித்து கவிதைகள் எழுதி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரியங்கா நல்காரியின் இந்த புதிய முயற்சி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--