நடிகை தமன்னா, கடந்த 20 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். ஹீரோயினாக நடிப்பதை தாண்டி, கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடுவதன் மூலம் தற்போது மேலும் புகழ்பெற்று விளங்குகிறார்.
ஒரு பாடலுக்கு நடனமாடவே பல கோடிகளை சம்பளமாக பெறும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் மார்க்கெட் வைத்திருக்கிறார் தமன்னா. சமீப காலமாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா.
இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என பல புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தன.
தமன்னா - விஜய் வர்மா ஜோடி பாலிவுட்டில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில், தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் தற்போது பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம், சமீபத்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நடந்த ஒரு விபரீத விளையாட்டு தான் என கூறப்படுகிறது.
சுற்றுலாவின் போது நண்பர்கள் அனைவரும் ஒரு ‘ட்ரூத் ஆர் டேர்’ பாணியிலான விளையாட்டு ஒன்றை விளையாடி உள்ளனர். அதன்படி, காதலன் காதலியிடமும், காதலி காதலனிடமும் இதுநாள் வரை கேட்க தயங்கிய கேள்விகளை கேட்கலாம் என்றும், எந்த கேள்வியாக இருந்தாலும் கூச்சப்படாமல் பதில் சொல்ல வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அப்போது நடிகை தமன்னாவின் மனம் நோகும் படியான ஒரு கேள்வியை விஜய் வர்மா விளையாட்டாக கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தமன்னா கடும் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி தனியாக நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகை தமன்னா ஒரு பேட்டியில், "நீங்கள் யாரிடமாவது 'ஐ ஹேட் யூ' என்று சொல்லி இருக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில், " 'ஐ ஹேட் யூ' என்பது மிகப்பெரிய வார்த்தை, அது மிகவும் மோசமானது கூட. இந்த உலகத்தில் நான் ஒரு மனுஷி, என் எதிரில் இருப்பவர் இன்னொரு மனிதர். அவரிடம் நான் உங்களை வெறுக்கிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
அது அவரை மனதளவில் மிகவும் பாதிக்கும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் 'ஐ ஹேட் யூ' சொல்லிவிட்டு தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, பேசாமல் கூட பிரிந்து செல்லலாம்," என தத்துவம் பேசினார்.
தொடர்ந்து பேசிய தமன்னா, "ஆனால் சிலர் இந்த வார்த்தைக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் கூட இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.
ஏன் அவர்களை வெறுக்கிறேன் என்றால், ஒரு விஷயத்தை செய்தால் அதனால் நான் கஷ்டப்படுவேன், என் மனம் நோகும் என தெரிந்தே அந்த விஷயத்தை செய்யும் போது அவர்கள் மீது வெறுப்பு வருகிறது.
என்னைப் பற்றி தெரியாமல், நான் இதை செய்தால் கோபப்படுவேன், நொந்து போவேன் என தெரியாமல் ஒரு விஷயத்தை செய்திருந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
ஆனால் தெரிந்தே ஒரு விஷயத்தை நான் கஷ்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செய்பவர்கள் 'ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைக்கு உரிய தகுதியானவர்கள், அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்," என்று கூறியிருந்தார்.
தமன்னாவின் இந்த பழைய பேட்டியை தற்போது நடக்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, நடிகை தமன்னாவின் மனது நோகும் என தெரிந்தே விஜய் வர்மா ஏதோ ஒரு கேள்வியை விளையாட்டில் கேட்டுள்ளார் என்றும், அதன் காரணமாக தான் நடிகை தமன்னா கோபத்துடன் தனியாக கிளம்பி வந்திருக்கிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
மேலும், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் நீக்கிவிட்டது இந்த பிரேக்கப் வதந்திக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இருப்பினும், ஒரு சில நெருங்கிய வட்டாரங்கள், அவர்கள் பிரிந்துவிட்டதாகவும், பிரேக்கப் செய்தாலும் இனி நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமன்னா மற்றும் விஜய் வர்மா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

