பூஜா ஹெக்டேவின் குத்தாட்டம்.. ஒரே இரவில் பேசுபொருளான சமாச்சாரம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, இளம் நடிகை ஸ்ரீலீலாவின் ஐட்டம் பாடல் வாய்ப்பை தட்டிப் பறித்து, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

ராம்சரண் நடிக்கும் பெத்தி படத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை புச்சி பாபு சனா இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 

இதில் ஒரு குத்தாட்ட பாடல் இடம்பெறுவதாகவும், அதற்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு ஆரம்பத்தில் ஸ்ரீலீலாவை இந்தப் பாடலுக்கு தேர்வு செய்தது. 

புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலாவின் “கிஸ்ஸிக்” பாடல் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், பெத்தி படத்திலும் அவரை நடனமாட வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென பூஜா ஹெக்டே இந்த வாய்ப்பைப் பெற்றார். 

இது தெலுங்கு திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீலீலாவுக்கு இடையே முன்பு குண்டூர் காரம் மற்றும் உஸ்தாத் பகத் சிங் படங்களில் பூஜா பதிலாக ஸ்ரீலீலா தேர்வானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், பெத்தி படத்தில் பூஜாவின் இந்த வாய்ப்பு, “பதிலடி” என பேசப்படுகிறது. பூஜா, ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரணுடன் “ஜிகேலு ராணி” பாடலில் நடனமாடி புகழ் பெற்றவர். 

இதனால், படக்குழு அவரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம், திரையுலகில் வாய்ப்புகளுக்கான போட்டியையும், நடிகைகளுக்கு இடையேயான மறைமுக மோதல்களையும் வெளிப்படுத்துகிறது. 

ஸ்ரீலீலாவுக்கு இது ஒரு பின்னடைவாக இருந்தாலும், அவரது ராபின்ஹூட் மற்றும் உஸ்தாத் பகத் சிங் படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பூஜா ஹெக்டே, தளபதி 69 உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். 

பெத்தி படத்தின் இந்த ஐட்டம் பாடல், ரசிகர்களுக்கு புதிய ஆரவாரத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--- Advertisement ---