மதுரைக்கு கிழக்கே ஒரு அழகிய கிராமம் அங்கே பராமரிப்பு இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு கோயிலின் பின்புறம் மர்மமான ஒரு கிணறு இருக்கிறது.
இந்த கிணற்றை ஆராய்ச்சி செய்ய வருபவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள் என்பது அந்த ஊர் மக்களின் அச்சமாக இருக்கிறது.
இதனால் அந்த கிணற்றுக்கு அருகே இருக்கும் கோயிலுக்கு கூட செல்லாமல் அந்த கோயில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இப்படி அமானுஷ்யம் நிறைந்த அந்த கிணற்றுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? என்று தொல்லியல் ஆய்வு செய்து வரும் தொல்லியல் நிபுணர் அர்ஜுன் என்ற இளைஞன் அந்த கிணற்றை பற்றி தகவல் அறிந்து, அந்த கிணற்றுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சோதிக்க பயணப்படுகிறான்.
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பாணி.. பாணி என்று ஒரு பக்கெட்டில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்து வரும் ஒருவனை நிறுத்தி ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி தன் பைக்குள் சொருகி கொண்டு வண்டியில் ஏறுகிறான்.
ரயிலில் ஏறியதும் தேவதை போல இருக்கும் மீனா என்ற பெண்ணை பார்கிறான். டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டிருக்கும் அவளுடைய வாட்டசாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு, சுண்டி இழுக்கும் முக அழகு, உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட்டில் பளிச்சென தெரியும் அவளுடைய தொடையின் வடிவம் செதுக்கி வைத்த தேக்கு போன்று காட்சி தருகிறது. இந்த அனைத்திலும் தன்னுடைய வயது தடுமாறுவதை உணர்கிறான்.
மீனாவை இப்படி பார்த்த அர்ஜுன் மீனாவின் மீது தனக்கு வந்திருப்பது காதலா, காமமா.. எப்படியாவது அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசையை உள்ளே வைத்துக் கொண்டு ரயிலில் உள்ளே செல்கிறான்.
அர்ஜுனை பார்த்த மீனா.. இங்கே இடம் இருக்கும் உக்காருங்க.. என்று தன் முன்னால் இருந்த இருக்கையை கை காட்டுகிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுன் தயக்கத்தோடு அமருவது போல அமருகிறான். ஆனால், மனதுக்குள் ஏக கொண்டாட்டம்.
அர்ஜுன் அவளிடம் பேசும் முன்பே மீனாவே வழிய வந்து அர்ஜுனிடம் பேசுகிறாள். என் பெயர் மீனா.. என்று ஆரம்பித்து அவர்களுக்கு அறிமுக உரையாடல்கள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்தது.
ரயில் சேலம் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும் போது, மீனா அர்ஜுனிடம் எனக்கு பெற்றோர்கள் இல்லை. தன்னுடைய தோழியின் வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறாள்.
இதை கேட்டு அதிர்ச்சியான அர்ஜுன். என்ன சொல்றீங்க.. உங்களை பாத்தா ஆதரவு இல்லாத பெண் போலவே தெரியலையே.. பணக்கார பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ணியிருக்கீங்க.. மேக்கப்.. ஹேர்ஸ்டைல் எல்லாம் சினிமா நடிகை மாதிரி இருக்கு.. இப்போ தான் காலேஜ் படிச்சுகிட்டு இருக்கீங்க... நம்பவே முடியலயே.. என்னை கலாய்கிறீங்களா..? என்று கேட்கிறான் அர்ஜுன்.
தன்னை எந்த அளவுக்கு கவனித்திருக்கிறான் அர்ஜுன் என்று புரிந்து கொண்டவளாக.. நான் கலாய்க்கவில்லை.. உண்மையை தான் சொல்கிறேன்.
என்னமோ தெரியல இதை உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணுது.. என கூறி விட்டு அடுத்த அதிர்ச்சியை கொடுக்கிறாள் மீனா. ஆம், எனக்கு அப்பா, அம்மா இல்லை. சிறுவயதிலேயே என்னுடைய அப்பா,அம்மா இறந்து விட்டார்கள். வழி தெரியாமல் இருந்த என்னை என்னுடைய தோழியின் அப்பா தான் தத்தெடுத்து வளர்த்தார்.
ஆனால், நான் வயசுக்கு வந்த அப்புறம் அவர் என்னிடம் நடந்து கொள்ளும்விதம் மாறியது. குளிக்கும் போது மறைந்திருந்து பார்ப்பது, என்னுடைய உள்ளாடைகளை எடுத்து என் கண் முன்னாலேயே முத்தமிடுவது போன்ற வேலைகளை செய்தார்.
ஒரு கட்டத்தில், உடல் ரீதியாகவே என்னை அணுக ஆரம்பித்தார் என்று தனக்கு நடந்த அத்தனை கொடுமையையும் ஒவ்வொன்றாக கூறுகிறாள்.. இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்பதற்காக தோழி அப்பா செய்யக்கூடிய இந்த கொடுமைகளை சகித்துக் கொள்வதாகவும் அர்ஜுனிடம் கூறுகிறாள் மீனா.
இதனைக் கேட்ட அர்ஜுன் அதிர்ச்சியாகிறான். இவ்வளவு கொடுமையை சகித்துக் கொண்டு நீ உன் தோழி வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. உனக்கு விருப்பம் என்றால் நீ என்னுடன் வரலாம் என்று கூறிய அவன்.. நான் உன்னை காதலிக்கிறேன் என கூற மீனாவுக்கு தூக்கி வாரி போடுகிறது.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் ரயில் ஜன்னலுக்கு வெளியே நகரும் மரங்களையும், தண்டவாளத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் கற்களையும் பார்த்தவாறு பித்து பிடித்தது போல எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டிருக்கிறாள்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அர்ஜுனுக்கு எதுவும் பிடிபடவில்லை நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. மீனா பதில் பேசுவதாக தெரியவில்லை. எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுன் மீனாவின் தொடை மீது மெதுவாக தன்னுடைய கை வைத்து.. மீனா நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா? என்னை மன்னிச்சுடு.. உன்னோட இயலாமையை புரிந்து கொண்டு நான் காதலை சொல்லவில்லை.. நீ இதையெல்லாம் சொல்வதற்கு முன்பே நான் உன் மீது காதலில் விழுந்து விட்டேன்.. உனக்கு இதில் விருப்பம் இல்லைனா.. நாம ஃப்ரெண்ட்சாவே இருப்போம்.. என்னை தப்பா நெனைசிக்காத.. என்று மீனாவிடம் கூற சட்டென அர்ஜுனை பார்த்தாள் மீனா.
(தொடரும்...)
இந்த விஷக்கத்தி (Vishakkathi) தொடர் 5 பாகங்கள் உள்ளடக்கியது. எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் முடிவு கொண்ட இந்த கதை Tamizhakam.Com தளத்தில் வெளியாகும்.
கதாசிரியர் : சகா முத்து