தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், சன் டிவி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை திருமணம் செய்யவிருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா, 33 வயதான தொழிலதிபராவார். இவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 35,800 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அனிருத், ‘வை திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர், தற்போது இந்தியாவின் மிக உயர்ந்த சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக விளங்குகிறார்.
ஒரு படத்திற்கு 10-12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024-ல் இருவரும் காதலிப்பதாகவும், 2025-ல் திருமணம் செய்யவிருப்பதாகவும் சமூக வலைதளங்களில், குறிப்பாக ரெடிட் மற்றும் எக்ஸ் தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் உணவகங்களில் ஒன்றாக தென்பட்டதாகவும், லாஸ் வேகாஸ் பயணத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்ததாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அனிருத் அல்லது காவ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, அனிருத் தனது நெருங்கிய நண்பர்கள் என்று காவ்யாவுடனான உறவை விளக்கியிருந்தார். காவ்யா மாறன், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டமும், இங்கிலாந்து வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
சன் குழுமத்தின் இசை மற்றும் வானொலி அலைவரிசைகளை நிர்வகிக்கும் இவர், 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை கலாநிதி மாறன், 19,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். இந்த திருமண வதந்தி, அனிருத் மற்றும் காவ்யாவின் தொழில்முறை மற்றும் குடும்ப பின்னணி காரணமாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனிருத், ரஜினிகாந்தின் உறவினாரகவும், காவ்யா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியாகவும் இருப்பது இந்த வதந்திக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.