ஸ்டாலின் என்னுடைய ரத்த உறவு.. போனில் மணிக்கணக்கில் பேசுவோம்.. பகீர் கிளப்பிய நடிகை தேவிப்பிரியா!


தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை தேவி பிரியா. வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல், பெண் போலீஸ் கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தவர். 

90களில் சீரியல்கள் மக்களை வெகுவாக கவர்ந்த காலத்தில், எந்த சேனலை மாற்றினாலும் தேவி பிரியாவின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. அவரது கண்களின் அழகும், உதட்டுக்கு மேல் அவர் வைக்கும் செயற்கை மச்சமும் ரசிகர்களை வசீகரித்தவை. 

சன் டிவியில் நடிகை பானுப்பிரியாவின் ‘சத்தி’ சீரியலில் அறிமுகமான தேவி பிரியா, முதல் சீரியலிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர், இயக்குநர் பாரதிராஜாவின் சீரியலில் நடித்து மேலும் பிரபலமானார். 

கோபமும் வெறுப்பும் கலந்த வில்லி வேடங்களில் தனது கண்களால் மிரட்டிய இவர், காமெடி கதாபாத்திரங்களிலும் தனித்து நின்றார். குழந்தைப் பருவத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழல் இருந்ததால், தொலைதூர கல்வியில் பி.ஏ. ஆங்கிலம் முடித்தார். 

இதனால், பல சீரியல்களில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தனது கனவை நனவாக்கினார். தற்போது சீரியல்களில் குறைவாகவே நடித்தாலும், வெள்ளித்திரையில் கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். 

தனது கதாபாத்திரங்களின் பெயர்களாலேயே ரசிகர்கள் இவரை அழைப்பது, தனது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என பல பேட்டிகளில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், தேவி பிரியா தனது சகோதரர் குறித்து உருக்கமாக பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அவரது சகோதரர் வேறு யாருமல்ல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலின். “ஸ்டாலின் எனக்கு சித்தப்பா, பெரியப்பா முறையில் தம்பி. ரத்த சொந்தமாக இருந்தாலும், அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. ஆனால், போனில் மணிக்கணக்காக பேசுவோம். அவனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. எங்களுக்கு இடையே ஆழமான பாசம் இருக்கிறது,” என உருக்கமாக பேசியிருக்கிறார் தேவி பிரியா. 

சில ஆண்டுகளுக்கு முன் இவர் குறித்து சர்ச்சைகளும் வதந்திகளும் பரவினாலும், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தேவி பிரியாவின் இந்த உருக்கமான பேட்டி, ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்