சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தனது கணவர் ராகுல் வர்மாவைப் பிரிந்தது குறித்து பேசியிருக்கிறார். 2023 மார்ச் மாதம் மலேசியாவில் நடந்த அவர்களது காதல் திருமணம், ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களில் ரசிகர்கள் தொடர்ந்து ராகுலை டேக் செய்ததால், அவர் ஆகஸ்ட் 2024-ல் பிரிவை உறுதிப்படுத்தினார்.
“நானும் பிரியங்காவும் பிரிந்துவிட்டோம். அவர் தனது பயணத்தில் தொடர வாழ்த்துக்கள். எங்களைப் பற்றிய விஷயங்களில் என்னை டேக் செய்ய வேண்டாம்,” என ராகுல் கூறினார்.
பிரியங்கா, இந்தப் பிரிவு குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு ‘நள தமயந்தி’ சீரியலில் நடித்த அவர், இரண்டு மாதங்கள் நடிப்பை நிறுத்தி கணவருடன் வாழ்ந்தார். ஆனால், சிறு வயதிலிருந்து கேமரா முன் நடித்துப் பழகியதால், நடிப்பை விட முடியவில்லை என்கிறார்.
“ஒவ்வொரு இரவும் தூங்கசெல்லும் போது படுக்கையில், நடிக்காமல் இருப்பதை நினைத்து கொடுமையாக உணர்ந்தேன்.ஒரு நாள் கூட விடாமல்.. இந்த எண்ணம் என்னை சித்ரவதை செய்தது. எனவே, மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கினேன்,” என பிரியங்கா வெளிப்படுத்தினார்.
இரு தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்தால், பிரியங்காவால் நடிப்பு ஆசையை விட்டு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பது தெளிவாகிறது.
‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பது இவரது வாழ்க்கையில் பொருந்துவதாக உள்ளது. நடிப்பு மீதான ஆர்வமே அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பிரிவு இருவரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு எனினும், அதிகாரப்பூர்வமாக இருவரும் முழு விளக்கம் அளிக்கவில்லை.