ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கே TOUGH கொடுத்தார்.. ஆனால்.. யார் கண்ணு பட்டுச்சோ..


தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் மிக அழகிய பாடல்களை வழங்கிய இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்ரீவிலிபுத்தூரைச் சேர்ந்த தேவேந்திரன், இளம் வயதிலேயே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர். இசை மீதான ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் விட்டு, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

ஆரம்பத்தில் மற்ற இசையமைப்பாளர்களுக்கு நோட்ஸ் எழுதும் பணியைச் செய்தாலும், அவரது திறமையை கண்டறிந்த தயாரிப்பாளர் கோவை தம்பி, ‘மண்ணுக்குள் வைரம்’ (1986) படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார். 

இயக்குனர் மனோஜ் குமார் முன்மொழிந்த இப்படத்தில், தேவேந்திரன் இசையமைத்த ‘புத்தம் புது ஓலை வரும்’, ‘கிழக்கு வெளுத்தாச்சு’ போன்ற பாடல்கள் மாபெரும் ஹிட் ஆனவை. 

பின்னர், பாரதிராஜாவின் ‘வேதம் புதிது’ (1987) படத்தில் ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ உள்ளிட்ட பாடல்களால் புகழடைந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோரின் குரலில் பாடல்கள் முத்திரை பதித்தன. 

‘உழைத்து வாழவேண்டும்’ படத்திலும் அவரது மேற்கத்திய பாணி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. ஆனால், இளையராஜாவின் ஆதிக்கம் மற்றும் சரியான படங்களை தேர்ந்தெடுக்காததால், தேவேந்திரன் பின்னுக்குத் தள்ளப்பட்டார். 

15 படங்களுக்கு இசையமைத்த அவர், இளையராஜாவிற்கே மிகப்பெரிய போட்டியாளராக வந்திருக்க வேண்டியவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

--- Advertisement ---