புகைப்படத்தில் இருக்கும் விஜய் பட நடிகை யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

பாலிவுட் மற்றும் சமூக வலைதளங்களில் தனித்துவமான ஃபேஷன் மற்றும் கவர்ச்சியால் பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டு, முன்னணி நடிகைகளையும் மிஞ்சும் புகழைப் பெற்றவர்.

'பிக் பாஸ் ஓடிடி' உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, குறுகிய காலத்தில் புகழ் பெற்ற உர்ஃபியின் வெற்றிக்கு அவரது தைரியமான கவர்ச்சி மற்றும் வித்தியாசமான ஆடைகளே முக்கிய காரணம்.

அஞ்சு மிட்டாய், பிளாஸ்டிக் பை, பூ இதல்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள், செல்லோ டேப், விளையாட்டு பொம்மைகள் என பலவை உடையாக மாற்றி, ஃபேஷன் உலகில் புரட்சி செய்யும் உர்ஃபியின் ரீல்ஸ் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் வைரலாகி, இளைஞர்களை கிறங்கடிக்கின்றன.

ஹிந்தியில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகவிருந்த தீராத விளையாட்டு பிள்ளை ரீமேக் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவிருந்தார் அம்மணி. ஆனால், கடைசி நேரத்தில் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டது.

“கவர்ச்சி கண்ணி”, “கிளாமர் பியூட்டி”, “கவர்ச்சி கடல்” என எத்தனை உவமைகள் சொன்னாலும், அவரது தோற்றத்திற்கு இவை பொருந்தாது என ரசிகர்கள் புகழ்கின்றனர்.

ஆனால், சமீபத்தில் உர்ஃபி வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தனது உதடுகளை பழ பழப்பாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற, ஹையலூரோனிக் அமிலம் கொண்டு லிப் ஃபில்லர் சிகிச்சை மேற்கொண்டார்.

ஆனால், இந்த ஃபில்லர்கள் தவறாக அமைந்ததால், அவற்றை அகற்ற (dissolve) முடிவு செய்தார். இந்த அறுவை சிகிச்சையின் பின்னர், அவரது உதடுகளும் கன்னங்களும் வீங்கி, முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உர்ஃபி, “இது ஃபில்டர் இல்லை. என் ஃபில்லர்கள் தவறாக இருந்ததால் அவற்றை அகற்றினேன்.

மீண்டும் இயற்கையாக ஃபில்லர் செய்ய உள்ளேன். நல்ல மருத்துவரை தேர்ந்தெடுப்பது முக்கியம்,” என குறிப்பிட்டார். லிப் ஃபில்லர்கள், ஹையலூரோனிக் அமிலத்தை உதடுகளில் செலுத்தி, அவற்றுக்கு பருமனையும் அழகையும் தருவது.

இது சருமத்தை மிருதுவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தவறான மருத்துவர்கள் அல்லது முறையற்ற சிகிச்சையால், வீக்கம், இரத்தப்போக்கு, நோய்த்தொற்று, அசமமான உதடுகள், கட்டிகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

உர்ஃபியின் வீடியோ, இந்த சிகிச்சையின் வலி மற்றும் ஆபத்துகளை வெளிப்படுத்தியது. மருத்துவர்கள், இந்த செயல்முறை 10-15 நிமிடங்களில் முடிந்தாலும், 48-72 மணி நேரம் வீக்கம் நீடிக்கலாம் என எச்சரிக்கின்றனர். உர்ஃபியின் இந்த வெளிப்படையான பகிர்வு, ரசிகர்களிடையே பாராட்டையும், சில விமர்சனங்களையும் பெற்றது.

“இவ்வளவு தைரியமாக உண்மையை காட்டுவது பெரிய விஷயம்,” என ஒரு ரசிகர் கருத்து தெரிவிக்க, மற்றவர்கள் இது கவன ஈர்ப்பிற்காகவே என விமர்சித்தனர். உர்ஃபியின் இந்த அனுபவம், காஸ்மெட்டிக் சிகிச்சைகளின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ‘தி ட்ரைட்டர்ஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, தனது ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையால் இளைஞர்களை ஈர்க்கும் உர்ஃபி, இந்த சம்பவத்தால் மேலும் கவனம் பெற்றுள்ளார்.

English Summary : Social media star Urfi Javed, with 5.3 million Instagram followers, gained fame through bold fashion and glamour. Her recent video revealing a swollen face after dissolving misplaced lip fillers from nine years ago shocked fans. The painful procedure highlighted cosmetic surgery risks, sparking debates on authenticity and safety.