உலக நாயகன் கமல் ஹாசனின் விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபிராமி.
வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து பன்மொழி நடிகையாக வலம் வந்துள்ளார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்து நடித்த அபிராமி, தனது கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றார்.

சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அண்மையில், பெட்டில் படுத்தபடி எடுக்கப்பட்ட க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சக நடிகைகளான ரித்திகா சிங், ஜெயலட்சுமி, தீபா வெங்கட் உள்ளிட்டோர் அபிராமியின் அழகையும் புகைப்படங்களின் ஸ்டைலையும் பாராட்டி தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அபிராமியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவடையச் செய்துள்ளன. தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சமூக ஊடக பங்களிப்பால் அபிராமி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

Summary in English: Actress Abhirami, who rose to fame with Kamal Haasan’s Virumaandi, has acted in Tamil films like Vanavil, Samudhiram, Dosth, and Charlie Chaplin, as well as Telugu, Kannada, and Malayalam films. Recently, she gained praise for her role in Thug Life. Her latest cute bed photoshoot has gone viral, earning compliments from actresses like Rithvika Singh, Jayalakshmi, and Deepa Venkat.


