சொந்த அப்பனையே.. அதிர்ச்சி கொடுத்த வனிதா.. கண்கலங்கிய பின் சொன்ன வார்த்தை.. இளையராஜாவுக்கு சவால்..

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சிவராத்திரி’ பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரம் குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார்.

இளையராஜா தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதற்கு பதிலளித்த வனிதா, இளையராஜாவின் குடும்பத்துடன் தனக்கு நெருங்கிய உறவு இருந்ததாகவும், குறிப்பாக பவதாரணியுடன் ஆழமான பிணைப்பு இருந்ததாகவும் கூறினார்.

அவர்களின் குடும்பத்தில் மருமகளாக செல்லவிருந்ததாகவும், ஆனால் அது நடக்காததால் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு தன்மீது காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவும் வனிதா தெரிவித்தார். 

பாடல் உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாகவும், இளையராஜாவின் ஆசி பெற்றதாகவும் கூறிய அவர், இந்த வழக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டதாக குற்றம்சாட்டினார். 

தனது தந்தையுடனேயே வழக்கு எதிர்கொண்டவர் என்பதால் இது பெரிய பிரச்சனையில்லை என்றாலும், இளையராஜாவை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்குவதாகவும், இந்த சட்ட நடவடிக்கை குடும்ப உறவுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 

பணத்தை விட உறவு முக்கியம் எனக் கூறிய வனிதா, இவ்வளவு நெருக்கமாக பழகிய பின்னர் பணத்திற்காக இப்படி செய்வது புரியவில்லை என கண்ணீர் மல்க பேசினார். இந்த விவகாரம் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary: Vanitha Vijayakumar, in a recent interview, expressed distress over Ilaiyaraaja’s legal notice against her film Mrs & Mr for using his song “Sivarathiri” without permission. Claiming close ties with his family, especially Bhavatharini, she alleged the lawsuit stems from personal grudges after a failed marriage proposal with his son.