மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் "அட்ஜஸ்ட்மென்ட்" எனும் பழக்கம் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.சாந்தி வில்லியம்ஸ் கூறுகையில், "நான் 15-16 வயதாக இருக்கும்போதே மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்.

இதனால், மலையாள சினிமாவை விட்டு விலகி தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்கு இதுபோன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை," என்றார்.
மேலும், மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, பதில் சொல்ல வேண்டிய அச்சத்தில் தலைவர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ததாகவும், இது ஒரு தவறான செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
"ராஜினாமா செய்துவிட்டு பிரச்சனையை மறைமுகமாக தீர்த்த பிறகு மீண்டும் பதவி ஏற்பார்கள். இதையும் விவரம் அறியாத ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தலைவர்களாக இருந்தால் பதில் சொல்ல வேண்டும், ஏன் முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய ஒரு பெண்ணை, முன் வரிசையில் அமர்ந்திருந்த மோகன்லால் அசிங்கமான சைகை செய்து பார்த்ததாகவும், அந்தப் பெண் தமிழில் மிகவும் பிரபலமான நடிகரின் மகள் என்றும் தெரிவித்தார். "நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்று மலையாள நடிகர்கள் நினைப்பதாக" அவர் குற்றம்சாட்டினார்.
மலையாள திரையுலகில் வயது ஒரு பொருட்டல்ல என்றும், "சந்தோஷம் தான் முக்கியம்" என்று கூறி, வயது வித்தியாசம் பார்க்காமல் படுக்கைக்கு அழைத்து தொல்லை செய்வதாகவும் சாந்தி குறிப்பிட்டார்.

"தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால், இங்கு பெண்களை தேடிச் சென்று கஷ்டப்படுத்துகிறார்கள்," என்று கவலை தெரிவித்தார்.
மேலும், ஒரு படத்தின் தயாரிப்பாளர் குடிபோதையில் தன்னை தொந்தரவு செய்ததாகவும், இதுபோன்ற பிரச்சனைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தபோதிலும், அப்போது யாரும் பேசவில்லை என்றும் அவர் கூறினார். "இப்போது தைரியமாக பேசுபவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆனால், உயர்ந்தவர்களாக நினைத்தவர்கள் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்," என்று வேதனை தெரிவித்தார்.சாந்தி வில்லியம்ஸின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
இதற்கு திரையுலக தலைவர்கள் மற்றும் நடிகர்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Summary in English : Actress Shanthi Williams revealed shocking details about sexual harassment in the Malayalam film industry, including "adjustment" demands. Facing issues at 15-16, she switched to Tamil cinema. She criticized industry leaders' resignations to evade accountability and exposed inappropriate behavior by actors, urging action against perpetrators.
