சென்னை: பிரபல நடிகை சுகாசினி சமீபத்தில் ஒரு பேட்டியில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஒரு படத்தில் நடிக்கும் போது, மரண வாக்குமூலம் கொடுத்து தன்னைத் தானே சுட்டு இறப்பது போன்ற காட்சியில் நடித்த அனுபவத்தை அவர் விவரித்தார்.

இதில், தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு, பின்னர் "அந்தக் கொலை நான் செய்தேன், அவர் செய்யவில்லை" என்ற வசனத்தை பேசி விழுவதாக அமைந்த காட்சி அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
காட்சியை பார்த்து, இயக்குனரிடம் "நெற்றியில் துப்பாக்கியால் சுடினால் மூளை உடனே தெறிக்கும், அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய வசனத்தை எப்படி பேச முடியும்? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேள்வி எழுப்பிய சுகாசினிக்கு, இயக்குனர் "அது மூளை இருப்பவர்கள் கேட்பார்கள், உங்களுக்கு தான் மூளையே இல்லையே.. நீங்கள் பண்ணலாம்" என்று பதிலளித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அனுபவம் அப்போது அவருக்கு மிகவும் கொடுமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில், சுகாசினியின் துணிச்சல் மற்றும் திரைப்பட காட்சிகளின் நடைமுறைகள் குறித்து ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
Summary in English : Actress Suhasini recently shared a harrowing experience from a film shoot, where she was forced to perform a death scene with a gun to her head, questioning its logic. The director’s dismissive response left her traumatized, though she now finds it amusing, sparking discussions online.

