குழந்தைக்கு Code Word வச்சிருக்காங்க சார்.. என் கண்ணே கலங்கிருச்சு.. இளைஞர் பகீர் பேட்டி..

சென்னையைச் சேர்ந்த இளைஞர் விவேகா என்பவர் பிரபல செய்தி ஊடகமான பாலிமர் நியூஸ் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறிய தகவல்கள் நம்மை திகைக்க வைக்கும் அளவிற்கு இருக்கின்றன. 

அவர்கள் கூறியதாவது, சென்னையில் குழந்தைகள் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடக்கிறது, சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர் கடந்த திங்கட்கிழமை எனக்கு போன் செய்து வித்யா என்பவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு குழந்தைகள் விற்பனை பற்றி பேசுகிறார் என்று என்னிடம் கூறினார். அப்போது நான் இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று விட்டுவிட்டேன். அன்று தான் நான் டி என் ஏ என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய குழந்தையின் கையில் அடிபட்டது. 

என்ன இது..? என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு வேலை குழந்தை கடத்துவதை இவர்கள் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்களா? எதற்காக நமக்கு இந்த விவரம் தெரியவந்தது..? என்று யோசித்தேன். 

அதன் பிறகு அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். ஆம்.. அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்கிறார்கள் என்பதை கண்டு பிடித்தேன். கொடுமை என்னவென்றால் குழந்தைகளுக்கு Code Word வைத்திருக்கிறார்கள். 

அவர்கள் குழந்தைகளை மெட்டீரியல் அல்லது பொருள் என்று கூறுகிறார். இது தெரிந்ததும் என் கண்ணே கலங்கி விட்டது. மெட்டீரியல் வருகிறதா..? எவ்ளோ பழசு? (குழந்தையின் வயது) மெட்டீரியல் என்ன விலை..? என்று குழந்தைகளை ஒரு மெட்டீரியல் என்று தொலைபேசியில் பேசுகிறார்கள். 

அதன் பிறகு அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்னவெல்லாம் சொல்லி குழந்தைகளை விற்கிறார்கள் யாரிடம் விற்க்கிறார்கள்.. எவ்வளவு ரூபாய்க்கு விற்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை நான் சேகரித்தேன். சேகரித்து காவல்துறை வசம் அந்த விஷயத்தை ஒப்படைத்து இருக்கிறேன். 

காவல் துறை அவரை கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இத்தனை சட்டம் காவல்துறை இருந்தும் இப்படி குழந்தைகளை விற்பனை செய்யக்கூடிய தொழில் என்பது பொதுவெளியில் நடந்து கொண்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது என கூறியிருக்கிறார் அந்த இளைஞர்.

சமீபத்தில் வறுமை காரணமாக தங்களுடைய சிறுநீரகத்தை ஒரு லட்சம், ரெண்டு லட்சம் என தொழிலாளர்கள் விற்பனை செய்கிறார்கள். அதனை மருத்துவமனைகள் வாங்கி 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வெளியானது. 

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு மருத்துவமனைகளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவு இடப்பட்டு இருக்கிறது. 

இந்த பரபரப்புக்கு மத்தியில் தற்போது குழந்தைகளை விற்பனை பலரையும் அதிர்ச்சியிட வைத்திருக்கிறது. சிறுநீரகத்தை விற்பனை செய்வது போல குழந்தையை பெற்று அந்த குழந்தையை விற்பனை செய்து பணம் பார்க்கும் கலாச்சாரம் பரவி விட்டதோ..? தொழிலாளர்கள் தங்களுடைய வறுமையை போக்க இப்படியான வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்களோ..? என்று அச்சமும் எழுகிறது. 

காவல்துறை இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்து இது சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து மேற்கொண்டு இது போன்ற விஷயங்கள் நடக்காத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பது இந்த செய்தியை அறிந்த எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

English Summary:Chennai resident Viveka, in a Polimer News interview, exposed a shocking child trafficking racket in the city, revealing how children are sold as “material” for ₹10-13 lakh using code words. After his son’s injury raised suspicions, he tracked the culprits and informed the police, who arrested a woman named Vidhya. Amid recent kidney trafficking scandals involving Dhanalakshmi Srinivasan Hospital, this incident raises concerns about exploitative practices targeting the poor.