முடியவே முடியாது.. ஜனநாயகன் X பராசக்தி ரிலீஸ்.. தயாரிப்பு நிறுவனத்திடம் சண்டை போடும் SK..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன் நடிக்கும் கடைசி படமாக இருப்பதால், தமிழகம் முழுவும் உள்ள திரையரங்குகளில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Jana Nayagan vs Parasakthi theater clash delayed by Sivakarthikeyan’s request

இந்நிலையில், ஜனவரி 9, 2026 அன்று ஜனநாயகன் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படமும் வெளியாகலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

பராசக்தி படத்தை உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் (உதயநிதியின் பினாமி நிறுவனமாக சிலர் குறிப்பிடுவது) இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தை ஜனநாயகன் படத்துடன் நேரடியாக மோதவைக்க தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாகும் நாளில் பராசக்தி வெளியானால், ஜனநாயகன் படத்திற்கு திரையரங்குகள் குறைந்துவிடும் என்பதுடன், தனது படத்திற்கும் போதுமான திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கருதுகிறார்.

எனவே, ஜனநாயகன் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகு பராசக்தி வெளியிடப்படுவதற்கு தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு தயாரிப்பு நிறுவனத்தின் பதிலைப் பொறுத்து மாறுபடலாம். உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் தரப்பு, விஜய்யின் படத்துடன் மோதி தங்கள் படத்தை சவாலாக வெளியிட விரும்பினாலும், சிவகார்த்திகேயனின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை, தமிழ் சினிமாவில் பெரிய படங்களுக்கிடையேயான திரையரங்க பங்கீடு மற்றும் வெளியீடு தேதி மோதல்களை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

English Summary: Vijay’s last film Jana Nayagan is set for a grand release across Tamil Nadu theaters due to his political entry. However, Udhayanidhi Stalin’s Red Giant and alleged proxy Dawn Pictures plan to clash with it by releasing Parasakthi on the same day, January 9, 2026. Sivakarthikeyan opposes this, requesting a three-day delay to avoid theater conflicts, awaiting the producers’ response.