சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பளையூர் சத்திரத்தைச் சேர்ந்த கனகா மற்றும் அவரது தம்பி ஏற்காடு பக்கோடாவைச் சேர்ந்த மோகன் ஆகியோர் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து, தலையூர் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு சுவர்களுக்குள் நடைபெற்று வந்த இவர்களது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில், கனகாவும் மோகனும் தெருவில் இறங்கி வழிப்போக்கர்களை விபச்சாரத்திற்கு அழைக்கத் தொடங்கினர்.
இதன்படி, தாரமங்கலம் செலவழி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அப்பகுதி வழியாகச் சென்றபோது, இவர்கள் அவரை வழிமறித்து, தங்கள் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் "ஜாலியாக இருக்கலாம்" என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக்திவேல், உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கனகா மற்றும் மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், விபச்சார தொழிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்த இரண்டு பெண்களை மீட்டு, அவர்களை பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.கைது செய்யப்பட்ட கனகா மற்றும் மோகன் ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பறையூர் சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary : In Omalur, Salem, Kanaka and her brother Mohan were arrested for running a prostitution racket. They lured passersby, including Sakthivel, to their rented house in Palaiyur Chathiram. Police rescued two women and sent them to a shelter, while the siblings were jailed.

