ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், சோமண்டேபள்ளி மணிகண்ட காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-வரலட்சுமி தம்பதியின் ஒரே மகள் ஹர்ஷிதா (22).

ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த இவர், கர்நாடகாவின் பாகேபள்ளியைச் சேர்ந்த நாகேந்திராவை ஆகஸ்ட் 4, 2025 அன்று காலை 9:30 மணிக்கு உறவினர்கள் முன்னிலையில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்தார்.
.png)
ஆனால், திருமணத்தில் ஹர்ஷிதாவின் முகத்தில் ஒரு மறைமுக சோகம் தெரிந்தது. கூச்சமோ, களைப்போ என்று உறவினர்கள் நினைத்தனர். அன்று இரவு, சோமண்டேபள்ளியில் உள்ள ஹர்ஷிதாவின் வீட்டில் முதலிரவு ஏற்பாடுகள் நடந்தன.
.jpg)
நாகேந்திரா ஸ்வீட் வாங்க வெளியே சென்றிருந்தார். வீடு திருமணக் களைப்பில் மூழ்கியிருந்தது. நாகேந்திரா திரும்பி வந்து முதலிரவு அறையின் கதவைத் தட்டியபோது பதில் இல்லை. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், உறவினர்கள் கதவை உடைத்தபோது, ஹர்ஷிதா மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக பெனுகொண்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக உறுதி செய்தனர்.காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை தொடங்கியது.
.jpg)
ஹர்ஷிதாவின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், தற்கொலைக்கு அரை மணி நேரத்திற்கு முன், ஹைதராபாத்தில் அவருடன் பணிபுரிந்த 10 ஆண் நண்பர்களும் ஒரு பெண் தோழியும் தனியாக சந்தித்து பேசியது தெரியவந்தது.
.png)
இதற்குப் பிறகே ஹர்ஷிதா இந்த முடிவை எடுத்திருக்கிறார். நாகேந்திராவும் அவரது குடும்பத்தினரும் மனைவியின் மரணத்திற்கு பிறகு உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
.jpg)
காவல்துறை, ஹர்ஷிதா யாரையாவது காதலித்தாரா, அல்லது பணியிடத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் மிரட்டப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறது.
நாகேந்திராவிடமும் விசாரணை நடைபெறுகிறது. ஹர்ஷிதாவின் மரணத்தைச் சுற்றிய மர்மம் முழு விசாரணைக்குப் பிறகே வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோகம், அவரது குடும்பத்தையும் உறவினர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
.jpg)

