விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த வனராஜ் (50) என்ற காவலாளி, தனது மூன்றாவது மனைவியான உமாவை (28) கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனராஜ், மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான இவர், கணவரைப் பிரிந்து இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த உமாவை மூன்றாவதாக திருமணம் செய்து, தோட்டத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் மகள்கள் தூங்கிய பிறகு, வனராஜும் உமாவும் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் தங்கியிருந்தனர்.காவலுக்கு சென்றிருந்த வனராஜ், மனைவி உமாவுடன் மோட்டார் அறையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன்போது, என்னால் நீண்ட நேரம் இயங்கமுடியவில்லை என கூறிய வனராஜ் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை கொண்டு செய்யக்கூடாத வேலையை செய்துள்ளார்.
இதனால், கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டு, அலறி துடித்து மயங்கியுள்ளார் உமா. ஆனால், உமா போதையில் மயங்கி கிடக்கிறாள் என்று நினைந்த வனராஜ் மறுநாள் காலை, உமாவின் உடலைப் பார்த்து வெகுநேரம் கழித்தே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உமாவின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், வனராஜின் கொடூர செயல் அம்பலமானது. இதையடுத்து, போலீசார் வனராஜை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Virudhunagar, Vanaraj, a 50-year-old watchman, killed his third wife, Uma, 28, by attacking her with a torchlight in a drunken state at a farm's motor room. Uma died from severe bleeding. Vanaraj was arrested after informing police late. Investigation revealed shocking details.
