அரியலூர்: ஆனந்தவாடி பகுதியில் கூலித் தொழிலாளி சின்னப்பா (வயது 45) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னப்பாவின் மனைவி பச்சையம்மாள் (வயது 40), கணவனின் கை, கால் நரம்புகளையும், பிறப்புறுப்பையும் கத்தியால் அறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சின்னப்பாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் பணிபுரிய, மகள் திருமணமாகி பக்கத்து ஊரில் வசிக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த சின்னப்பா, தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்து, மிதித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
.jpg)
சம்பவத்தன்று (ஆகஸ்ட் 16), மகள் தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது, வழக்கம்போல மது போதையில் வந்த சின்னப்பா, மனைவி மற்றும் மகளிடம் சண்டையிட்டு அடிக்க முயன்றார்.
மேலும், மகள் முன்பே மனைவி பச்சையம்மாளை கொச்சையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
.png)
இதையடுத்து, பச்சையம்மாள் மகளை அவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, திரும்பி வந்தார்.அப்போதும் சின்னப்பா மீண்டும், கொச்சையான, தகாத வார்த்தைகளால் பேசி, மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக பொறுத்து பொறுத்து பார்த்த பச்சையம்மாளுக்கு, அன்று ஆத்திரம் தலைக்கேற, கணவனை தள்ளி, கத்தியால் கை, கால் நரம்புகளையும், பிறப்புறுப்பையும் அறுத்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தார்.
.jpg)
கொலைக்கு பின் வீட்டை விட்டு வெளியேறிய பச்சையம்மாளை, அருகிலிருந்த இடத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், குடிப்பழக்கம் மற்றும் குடும்ப வன்முறையால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பச்சையம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Summary : In Ariyalur's Anandavadi, Pachaiyammal brutally murdered her husband Chinnappa, a daily wage worker addicted to alcohol, by cutting his limbs and genitals after years of domestic abuse. The incident, triggered by a drunken altercation, led to her arrest and highlights the dangers of alcoholism and domestic violence.
