"தாத்தா எங்ககிட்ட அப்படி நடந்துக்கல" அப்பா தான்.. இதயத்தை உடைக்கும் கொடுமையான வழக்கு.. அதிர்ச்சி தகவல்கள்..

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார்-ராதிகா தம்பதியர், தங்களது 8 வயது மகளைப் பயன்படுத்தி, விஜயகுமாரின் 60 வயது தந்தை மீது பொய்யான போக்சோ புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதம் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த புகாரில், தாத்தா தனது பேத்தியை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையில், சிறுமி தனது தாத்தா மீது எவ்வித தவறும் நடக்கவில்லை என்றும், தனது தந்தை தன்னை இவ்வாறு புகார் அளிக்குமாறு கூறியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, விஜயகுமார் மற்றும் ராதிகாவிடம் மேற்பட்ட விசாரணை நடத்தியது. விசாரணையில், விஜயகுமாருக்கும் அவரது தந்தைக்கும் சொத்து தகராறு இருந்தது தெரியவந்தது.

எம்இ படித்திருந்தும் வேலைக்குச் செல்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தந்தையின் சொத்துகளை தனக்கு எழுதிவைக்க வேண்டுமென விஜயகுமார் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

தந்தை மறுத்ததால், பொய் புகார் மூலம் அவரை சிறையில் அடைத்து சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டது அம்பலமானது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெற்ற மகளைப் பயன்படுத்தி தந்தை மீது பொய் புகார் அளித்த விஜயகுமார் மற்றும் ராதிகாவை கடுமையாகக் கண்டித்தது. மேலும், போக்சோ சட்டப்பிரிவு 22-இன் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த பொய் புகார், தவறாக விளக்கப்பட்டிருந்தால், தாத்தாவின் மனநிலையையும், சமூக அவமானத்தையும் பெரிதும் பாதித்திருக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள், இப்படிப்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கத் தகுதியற்றவர்கள் எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary : In Chennai’s Royapettah, Vijayakumar and Radhika falsely accused Vijayakumar’s father of assaulting their 8-year-old daughter under the POCSO Act. Investigation revealed the complaint stemmed from a property dispute. The Madras High Court condemned the couple, ordering action under POCSO Section 22 for misuse.