சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜெயலட்சுமி (45) ஆகியோரை அவர்களது மகன் ஆகாஷ் (23) மற்றும் மாற்றாந்தையின் மகள் கனகவள்ளி (18) ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, உடல்களை துண்டித்து மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனிச்சாமி, தனது முதல் மனைவி ஜெயந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமியை மணந்தார். ஜெயலட்சுமிக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகள் கனகவள்ளி, பழனிச்சாமி, அவரது மகன் ஆகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
.jpg)
ஆகாஷ், கோழிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.கடந்த ஆகஸ்ட் 16 முதல் பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் காணாமல் போனதாக ஆகாஷ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், விசாரணையில் ஆகாஷுக்கும் அவரது தந்தைக்கும் காதல் விவகாரம் தொடர்பாக மோதல் இருந்தது தெரியவந்தது.
.jpg)
ஆகாஷ் மற்றும் கனகவள்ளி இடையே காதல் உறவு இருந்ததாகவும், அவள் உனக்கு தங்கச்சி முறை வேண்டும் என இதற்கு பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
.jpg)
போலீஸ் விசாரணையில், ஆகஸ்ட் 17 அதிகாலை ஆகாஷ் இரண்டு மூட்டைகளை பைக்கில் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முதலில் கோழிக்கழிவுகளை கொட்டுவதாக ஆகாஷ் கூறி திசைதிருப்ப முயன்றார்.
ஆனால், தொடர் விசாரணையில், ஆகாஷ் மற்றும் கனகவள்ளி இருவரும் இணைந்து பழனிச்சாமியையும் ஜெயலட்சுமியையும் வெட்டிக் கொலை செய்து, உடல்களை துண்டித்து மூட்டைகளில் கட்டி ஏகாபுரம் மற்றும் ஆத்தளையூர் ஏரிகளில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
.jpg)
போலீஸார் ஆகாஷ் குறிப்பிட்ட இடங்களில் தேடுதல் நடத்தி, மூன்று மூட்டைகளில் மிதந்த உடல் பாகங்களை மீட்டனர். உடல்கள் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
.jpg)
ஆகாஷ் கைது செய்யப்பட்டு, கனகவள்ளியும் விசாரணைக்காக பிடிக்கப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு கனகவள்ளியும் உடந்தையாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
.png)
காதல் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், போதைக்கு அடிமையான ஆகாஷ், தனது தந்தையையும் மாற்றாந்தையையும் கொடூரமாக கொலை செய்து, உடல்களை துண்டித்து ஏரியில் வீசிய இந்த சம்பவம், பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
மேலும், தன்மீது சந்தேகம் வராமல் இருக்க, ஆகாஷ் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்து, இறுதியில் சிக்கியுள்ளார்.சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம், காதல் மற்றும் குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
.png)

