‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர், ‘சொசைட்டி பாவங்கள்’ வீடியோவால் தமிழகத்தில் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ‘ஹவுஸ் வைஃப் பாவங்கள்’ என்ற தலைப்பில் புதிய வீடியோவை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

‘சொசைட்டி பாவங்கள்’ வீடியோ, ஆணவக் கொலைகள் மற்றும் சாதிய பெயரால் இளைஞர்களின் ஆற்றல் வீணாவதை எதிர்த்து பேசியதால் பரவலான ஆதரவைப் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு தாக்கியதாக விமர்சனங்களையும், காவல் துறையில் புகாரையும் சந்தித்தது. இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், ‘ஹவுஸ் வைஃப் பாவங்கள்’ என்ற புதிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “ஒரே வீடியோவில் தமிழ்நாட்டையே ததிகிடத்தோம் செய்துவிட்டு, இப்போது அடுத்ததை எதுவும் தெரியாதது போல இறக்கிவிட்டீர்களே!” என வியந்து, கோபி-சுதாகரை புகழ்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ, இல்லத்தரசிகளின் அன்றாட பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கையாண்டு, மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், முந்தைய வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் அடங்காத நிலையில், இந்த புதிய வெளியீடு அவர்களுக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் ஒருசேர அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

கோபி-சுதாகரின் அடுத்த கட்ட நகர்வு சினிமாவை நோக்கி இருக்க, இந்த பரபரப்பு அவர்களின் பயணத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Summary : Gopi and Sudhakar’s Parithabangal YouTube channel stirred Tamil Nadu with their Society Paavangal video, sparking debates and legal complaints. Amid the unresolved controversy, they released a new video, Housewife Paavangal, earning praise from fans for its humor but potentially fueling ongoing criticism as they eye a cinema career.

