“இங்க்லீஷ் படம் மாதிரி பண்ணலாம் வாடா..” - கை கால்களை கட்டிப் போட்டு இல்லத்தரசி அரங்கேற்றிய கொடூரம்..

திருவள்ளூர்-புட்லூர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2025-ல் ஒரு ஆணின் உடல் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் ரயில்வே காவல்துறையின் விசாரணையில், அந்த உடல் டாஸ்மாக் குடோனில் பணிபுரிந்த அரவிந்த் மேத்யூ (25) என்பவருடையது என்பது தெரியவந்தது.

முதலில் இது தற்கொலையா அல்லது ரயில் மோதிய விபத்தா என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அரவிந்தின் தந்தை மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்ததையடுத்து, விசாரணை தீவிரமடைந்தது.

பிரேத பரிசோதனையில் அரவிந்த் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல்துறை, அவரது செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து, அயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா (30), ராணிப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தது.

விசாரணையில், உஷாவின் கணவர் பாண்டியன், பிரபல ரவுடியாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒன்பது வயது மகனுடன் வாழ்ந்து வந்த உஷா, 17 வயது சிறுவனுடன் உறவில் இருந்தார். உஷா, திருவள்ளூர் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

அவர் அடிக்கடி தோழியின் வீட்டுக்கு செல்லும்போது, அரவிந்த் மேத்யூ அவரை மிரட்டி, பணம் கேட்டு கிண்டல் செய்து, ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

அரவிந்தின் தொடர் தொல்லைகளால் ஆத்திரமடைந்த உஷா, அவரைப் பழிவாங்க திட்டமிட்டார். தனது நண்பரான ஜிம் உரிமையாளர் பால்ராஜுடன் இணைந்து, அரவிந்தை அழைத்து கொலை செய்ய முடிவு செய்தார். ஜூன் 18, 2025 அன்று, உஷா அரவிந்தை தனது வீட்டுக்கு வரவழைத்தார்.

“நீ தொந்தரவு செய்ததால், ஒரு முறை மட்டும் உன்னுடன் இருக்கிறேன். ஆனால், இனி தொல்லை செய்யக் கூடாது. பீர் வாங்கி வா,” என்று கூறி அழைத்தார். வேலையை விட்டு விட்டு, பீர் பாட்டில்களுடன் அரவிந்த் உஷாவின் வீட்டுக்கு வந்தார். இருவரும் மது அருந்தினர்.

போதையில் இருந்த அரவிந்த், ஆங்கிலப் படங்களைப் போல உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்தார். இதை சாதகமாக்கிய உஷா, அரவிந்தின் கை, கால்களை கட்டிலில் கட்டிப்போட்டார்.

பின்னர், செல்போனில் பால்ராஜ், 17 வயது சிறுவன், அவனது சகோதரர் மற்றும் பால்ராஜின் நண்பர் ஆகியோரை அழைத்தார். அவர்கள் அரவிந்தை சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, நெஞ்சில் மிதித்து கொலை செய்தனர்.

17 வயது சிறுவன், கொலைக்குப் பின் அரவிந்தின் உடலுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அரவிந்தின் உடலை இரவு வரை மறைத்து வைத்திருந்த கும்பல், பின்னர் பைக்கில் உடலை திருவள்ளூர்-புட்லூர் தண்டவாளத்தில் வீசியது.

பால்ராஜ் மற்றும் அவரது நண்பர் தப்பியோட, மற்ற மூவரையும் ரயில்வே காவல்துறை ஒரு வார தேடுதலுக்குப் பின் கைது செய்தது. செல்போன் உரையாடல்கள், பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்து, ஆதாரங்களுடன் காவல்துறை இவர்களைக் கைது செய்தது. தலைமறைவான இருவரைத் தேடும் பணி தொடர்கிறது.

Summary in English : In June 2025, Arvind Methyu’s mutilated body was found on the Thiruvallur-Pudlur railway track. Initially deemed a suicide or accident, police later confirmed he was strangled. Usha, a hospital worker, along with a 17-year-old boy and others, was arrested for luring and killing Arvind, a rowdy who harassed her, and dumping his body.