‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு, இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர். ஆனால், அவர்களின் சமீபத்திய ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற வீடியோ, ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதிய பெயரால் இளைஞர்களின் ஆற்றல் வீணாவதையும் பேசியிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்கியதாக விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இது இணையவாசிகளிடையே பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், வேங்கைவயல் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக, அந்த இளைஞர் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமைச்சரின் மகள் தொடர்ந்து போராடி வருகிறார்.
இதற்கெல்லாம், சொசைட்டி பாவங்கள் என்று வீடியோ வெளியிடாத கோபி, சுதாகர். வேறு சாதி பெண்ணை காதலித்த கவின் என்ற இளைஞர், அந்த பெண்ணின் அண்ணனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தப் பின்னணியில், கோபி-சுதாகரின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், “முகத்தில் மிளகாய் பொடி போட்டு ஒருவனை கொலை செய்து வீரம் என்று சொல்கிறீர்கள். முடிந்தால் அவனுக்கு கத்தி கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு ஜெயித்திருக்க வேண்டும்,” என்று கோபி-சுதாகர் பேசியது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேலி செய்யும் விதமாக இருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இது அந்த சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. யூடியூபில் இருந்து சினிமாவை நோக்கி பயணிக்கும் கோபி-சுதாகருக்கு இந்த சர்ச்சை பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
“தற்போது இவர்களுக்கு எழுந்த ஆதரவு ஒரு மாயை; இது எப்போது வேண்டுமானாலும் உடையலாம். ஆனால், எதிர்ப்பு நிலையானது,” என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஒரு கலைஞராக, சமூகப் பிரச்சினைகளில் நடுநிலையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை பலரும் வலியுறுத்துகின்றனர். “ஒரு சமூகத்தை மட்டும் இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல,” என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
மறுபுறம், இந்த வீடியோவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட சமூகத்தினர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், ‘பரிதாபங்கள்’ சேனல் பெரும் சிக்கலில் உள்ளது.
காலம் காலமாகஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாக்குவது தான்சமூக நீதி என தமிழ்நாட்டில் கற்பிக்கப்பட்டது எல்லாம் பழைய பஞ்சாங்கம் ஆகிவிட்டது என்றும் சமீப காலமாக, எந்த சமூகத்தையும் இழிவாக பேசக்கூடாது என்ற மனநிலைக்கு மக்கள் மாறி வருகிறார்கள்.
ஆனால், கோபி-சுதாகர் போன்றவர்கள் அதே பழைய பஞ்சாகத்தின் அடிப்படையில் வீடியோவை வெளியிடுகிறார்கள் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கோபி-சுதாகரின் இந்த சர்ச்சை, அவர்களின் சினிமா பயணத்திற்கு தடையாக அமையுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
Summary : Gopi and Sudhakar of the YouTube channel Parithabangal released a video, Society Paavangal, criticizing honor killings and caste-based violence, which gained massive online traction. However, it sparked controversy for allegedly targeting a specific community. Amid cases like Kavin’s murder and Minister Sekarbabu’s daughter’s struggle, the duo’s biased approach drew backlash, legal complaints, and debates about their credibility as they transition to cinema.

